Monday, November 14, 2011

கடவுள் படைப்பா உலகம்

கடவுள் உலகை படைக்கவில்லை என்கிறாயே நீ எப்படிப் பிறந்தாய்? என்று சிலர் கேள்விகேட்டார்கள். நான் என் தாய்தந்தையர் உறவால்

பிறந்தேன் என்பேன். உன் தந்தை, தாத்தா என்று அப்படியே போனால் முதல்மனிதன் எப்படிப் பிறந்திருப்பான் என்று கேட்டார்கள்.
(ஒருவன் எப்படி படைக்கப்பட்டான் என்று தெரியாவிட்டால் என்னவென்றே தெரியாத ஒன்றை வணங்க வேண்டுமா என்ன? அப்படி விவரம்

தெரியாததால் தனக்கு மேம்பட்ட சக்தியை வணங்குகிறேன் என்று சொன்னால் அது அறியாமையைத் தானே தெய்வம் என்று குறிக்கிறது.

தனக்கு மேம்பட்டிருந்தால் விழுந்து வணங்கிவிடுவேன் என்றுதானே ஆகிறது)
முதல் மனிதன் எப்படி தோன்றினான் என்பதற்கு எனக்கு விடை தெரியாவிட்டாலும் ஆண்பெண் கரு சேர்க்கை இல்லாமல் உயிர்

உருவாகாது என்பது எனக்குத் தெரியும். ஒருவனால் யாவற்றையும் படைத்திருக்க முடியாது என்பதையும் அறிகிறேன். அறிவியல்

சொல்வதுபோல படிநிலை பரிணாம வளர்ச்சியில் ஓர் உயிர் மற்றொரு இனமாக வளர்ந்து பிரிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதை சற்று

கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம்.
கடவுளின் படைப்பு என்பதைவிட படிநிலை வளர்ச்சிக்கே அதிக சாத்தியங்கள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு

ஆதாரங்கள் நிறையவே காட்ட முடியும். காட்டியிருக்கிறார்கள்.
நான் அதை நம்புவதற்கு காரணம் என்னவெனில் அது கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தக்கதாயும், தெரியாத

விஷயங்களை இட்டுக்கட்டி சொல்லாததாகவும் இருக்கிறது.
படைப்பதற்கு மூலமாக ஒருவன் வேண்டும் அவனையே கடவுள் என்கிறோம் என்கிறார்கள் பக்தர்கள். அப்படி வைத்துக் கொண்டால்

ஆண்டவன் மட்டும் யாரும் படைக்காமல் உருவானானா? என்ற கேள்வி எழும்.
பகுத்தறிவு முன்னோடி, அறிஞர் இங்கர்சால் இப்படி கேட்கிறார்.
கடவுள் உலகைப் படைத்தார் என்று வைத்துக்கொண்டால் அவர் படைக்கும் முன்பாக இங்கு எதுவுமே இல்லை. ஒரு பொருளை உற்பத்தி

செய்ய அதற்கு தேவையான மூலப்பொருள்கள் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் படைப்பதற்கும் மூலப்பொருட்கள்

தேவைப்பட்டிருக்க வேண்டும். அப்போது அவரைத் தவிர எதுவுமே இல்லாததால் அவர் தன்னில் இருந்தே பிரபஞ்சங்களை படைத்திருக்க

வேண்டும். தன்னில் இருந்து எல்லாவற்றையும் படைத்திருந்தால் அவர் ஜடத்தன்மை உடையவராகிறார் என்கிறார்.
ஜடத்தன்மைக்கும், மனிதத் தன்மைக்கும் வேறுபாடு உண்டு. உலகம் ஜடத்தன்மை உடையது என்பதால் புத்திக்கூர்மையுடன் செயல்படாது.

ஏனெனில் ஜடப்பொருள்கள் இயல்பை மீறி செயல்படாதவை. அது உங்களை கவனிக்கவோ, கட்டுப்படுத்தவோ, வேண்டுகோளை ஏற்று

செயல்படவோ திறனற்றது.
அதனை இயற்கையென்று கொள்வதில் என்ன பிழையிருக்கிறது. இறைவன் என்று உயர்த்திப்பிடித்து அதற்காக பல பொய்கள்,

புராணங்களைக் கூறி வழிபாடு என்று விழாக்கள் நடத்தி, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி பிறரிடம் ஏமாந்து போகவும், துணைக்கு

வருவாரா என்று ஏங்கித் தவிக்கவும், தன்னிடத்திலும், வாழ்விலும் நம்பிக்கையின்றி ஆறுதல் தேடி அலையவும் செய்ய வேண்டுமா?.
இங்கர்சால் இன்னும் தெளிவுபடுத்துகிறார்...
பொருள் தன்மை உடைய பிரபஞ்சத்தில் கோள்கள் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருக்கின்றன. இது அதன் இயங்குசக்தியை

காட்டுகிறது. இந்த இயக்கத்திற்கு தேவையான சக்தியை இதன் உள்ளாக இருந்தோ, அப்பால் இருந்தோ கடவுள் வழங்குகிறார் என்றால்

அவர் சக்தி உடையவர் என்றாகிறது.
சக்தி உள்ள எதுவும் வெளியிடுவதற்குத் தேவையான சக்தியை திரும்ப பெற்றுக்கொள்ளவோ உற்பத்தி செய்யவோ வேண்டும். கடவுள்

காலம்தோறும் சக்தி வழங்குவதாக வைத்துக்கொண்டால் அவர் எங்கிருந்து சக்தி பெறுகிறார். கொடுக்கப்பட்டதுபோக அவரிடம் எவ்வளவு

சக்தி மீதமிருக்கிறது. சக்தியை அவர் மனிதன்போல உணவின் மூலமாக பெற்றுக்கொள்கிறாரா? அல்லது தாவரங்கள்போல உற்பத்தி

செய்கிறாரா? சக்தியை ஓயாது கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர் சக்தியை திருப்பி பெற்றுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை யாராவது

நம்ப முடியுமா?. அப்படி இருந்தால் அவர் அழிந்து வருகிறார் என்பதுதானே பொருள்.
இங்கு எல்லாமே இயங்குவதால் அதை இயக்க ஒருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையற்றது. பிரபஞ்சத்தின் மிகச்சிறு கூறாக

கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அணுக்களின் சேர்க்கையால் உருவான

பொருட்களும், இயங்கு சக்தியைக் கொண்டிருக்கின்றன. இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பார்வைக்கு இயக்கமற்று இருப்பதாகத் தோன்றும் பொருட்களும்கூட இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. மின்னாற்றல்

கிடைக்கும்போது திடப்பொருட்கள், திரவப்பொருள் யாவற்றின் இயக்கத்திலும் இன்னும் பல மாறுதல்கள் ஏற்பட்டு வேறுவிதமாக

இயங்குவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
உயிர்களும் இப்படி இயல்பான இயக்கத்தின் ஊடே நிகழ்ந்த மாற்றத்தின் காரணமாக வேறுவிதமான இயக்கம் பெற்றிருக்கிறதே தவிர

இதில் வேறு அதிசயங்கள் மறைந்திருப்பதாக கொள்ள வேண்டியதில்லை.
ஆக பொருளும், சக்தியும் படைக்கப்படவில்லை. இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இயல்பிலேயே இயக்கமுடைய ஒன்றை

இயக்குபவனும், படைத்தவனுமான இறைவன் ஒருவன் இல்லவே இல்லை.
என்றும் மாறாத ஒரு அறிவியல் உண்மை என்னவென்றால் இங்குள்ள எந்த ஒன்றையும் முழுமையாக அழிக்க முடியவில்லை

என்பதுதான். நாம் ஒரு பொருளை மாற்றம் செய்து பயன்படுத்த முடியும், அதன் ஆற்றலைப் பெற்று மற்றொரு தேவைக்குப் பயன்படுத்த

முடியும்.
இதில் இருந்து விளங்க முடிவது என்னவென்றால் எதை அழிக்க முடியவில்லையோ அது ஆக்கப்பட்டிருக்கவும் முடியாது. ஏனெனில் எது

சேர்கிறதோ அது பிரியும், எது பிரியக்கூடியதோ அது எல்லா காலத்திலும் பிரியாமல் சேர்ந்து நிலைத்திருக்காது. எது அழியவில்லையோ

அது மீண்டும் உருவாகாது, ஏனெனில் அது அழியவே இல்லையே. பிறகு ஏன் அது உருவாக வேண்டும், உருவாக்கப்பட வேண்டும்.
எனவே அழியாத தன்மை பெற்றிருக்கும் அணுக்கள் படைக்கப்பட்டிருக்கவும் முடியாது. இயக்கமுள்ள அணுக்களை இயக்க யாரும்

தேவையும் இல்லை.
இயங்கும் அணுக்களால் ஈர்ப்பு சக்தி உருவாகும். ஈர்ப்பு சக்தியால் இணைப்பு உருவாகும். இணைந்து பொருள் உருவாகும். அவையும்

இயங்கும்.
உராய்வு, ஈர்ப்பு, அழுத்தம் காரணமாக மின்னாற்றலும் கிடைக்கும். அந்த ஆற்றலால் இயங்கும் பொருட்களின் இயக்கத்தில் வேறுவிதமான

மாற்று இயக்கமும் உருவாகும். அப்படி ஏற்பட்ட ஒரு மாறுபட்ட இயங்கு திறனுடையவன்தான் மனிதன் மற்றும் உயிரினங்கள்.
எனவே இயங்கும் அணுக்களின் சேர்க்கையில் உருவான உலகம் இயங்குவதிலும் சுற்றுவதிலும் எந்த வியப்பும் இல்லை. இந்த பூமி

மீண்டும் அணுக்களாக சிதறும். சிதறும் பல அணுக்கள் ஒன்றிணைந்து சிறு கோளாகலாம். அதில் ஏற்படும் தட்ப வெப்ப நிலைகளுக்கு

ஏற்ப உயிரினங்கள் மீண்டும் தோன்றலாம்.
எனவே எல்லாம் ஆண்டவன் படைத்த அதிசயம் என்றெண்ணி வாயைப் பிளந்து வாழ்த்தவும் வேண்டியதில்லை, வாயை மூடி வணங்கவும்

வேண்டியதில்லை.
ஆக பூமி மற்றும் அண்டசராசரங்கள் அனைத்தும், ஏசு கிறிஸ்து வா என்றதும் வந்ததுமல்ல. தனியொருவர் சுயம்புவாகத் தோன்றி

தன்போலவும், தன்னை வணங்குவதற்காகவும் பலரைப் படைத்து உருவாக்கியதும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
படைப்பின் வழியாக இறைவன் இல்லையென்று மறுத்தபிறகு மற்ற எல்லாம் புனைகதை என்று உரைக்க வேண்டிய அவசியமில்லை.

இருந்தாலும் இன்னும் சில வினாக்களையும் எனது அறிவிற்கு எட்டியபடி விவரிக்கிறேன்.

No comments:

Post a Comment